24.10.10

மாமா அப்ப ஒரு குவாட்டர் சொல்லேன்

1 . தொண்டன் : தலைவா  நான் கட்சியைவிட்டு விலகிக்கிறேன்

தலைவர்: ஏண்டா?

தொண்டன் : பின்ன என்ன தலைவா நானும் ரொம்ப நாளா பாத்துகிட்டேஇருக்கேன்  உனக்கு ஒரு மிரட்டல் கடிதம் கூட வரமாட்டிங்குது. நீயெல்லாம் ஒரு தலைவன் இதெல்லாம் ஒரு கட்சியா? 

2 .  தொண்டன் 1 : எதிர்கட்சிய எதிர்த்து ஆர்ப்பாட்டம் பண்ணலாம்னு தலைவர்கிட்ட சொன்னது தப்பா போச்சு.

தொண்டன் 2 : என்னாச்சு? 

தொண்டன் 1 : நம்மல கூட்டணில சேத்துகாத  கட்சிகளை எதிர்த்து ஆர்பாட்டம்னு  அறிவிச்சு இருக்கார்.  

3 . தலைவர் : (மேடையில்) எங்களை வெற்றிபெற செய்தால் உங்களுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறோம்

கீழிருந்து ஒருவன்: "மாமா அப்ப ஒரு குவாட்டர் சொல்லேன்".

தலைவர்: (!!!!!!!!????????) 

4. தொண்டன் 1 : என்னது நாளைக்கு நடக்கப்போற  நம்ம கட்சி ஆர்பாட்டத்த எதிர்த்து  மலைவாழ் மக்கள் எல்லாம் போராட்டம் நடத்த போறாங்களா ?

தொண்டன் 2 : பின்ன இந்தாளு வாய வச்சுக்கிட்டு சும்மா இருந்தாத்தான   "விலைவாசியை எதிர்த்து ஆர்பாட்டம்"ம்ம்கிரதுக்கு பதிலா "மலைவாசியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்" ன்னு பேட்டி குடுதிருக்கார்.

5 . தமிழ்நாட்டுல ஆளும்கட்சியாவோ   இல்ல எதிர்கட்சியாவோ இருக்கனும்னா என்ன பண்ணனும்?

ஆளும்கட்சியா இருந்தா லெட்டர் எழுத தெரிஞ்சிருக்கணும் எதிர்கட்சியா இருந்தா ஆர்பாட்டம் நடத்த தெரிஞ்சிருக்கணும். குறிப்பா ரெண்டு பேத்துக்குமே கேட்ட வார்த்தை பேச தெரிஞ்சிருக்கணும்.புடிச்சிருந்தா உங்கள் பொன்னான வாக்குகளை ஈரோட்டுக்காரனுக்கு  போட்டுட்டு  போங்ணா....

13.10.10

RAJஎந்திரன்..............தி பிக்..........

ஹலோ வேர்ல்ட்!!!

நான்தான்  சட்டி. மனிதன் உருவம் கொண்ட பன்றி.( என்னை பன்றின்னு சொல்லறதுக்கு அதுங்ககிட்ட அனுமதி வாங்கிவிட்டேன்) Weight 200 KG, Hip Size 54 inches


எனக்கு உலகில் உள்ள எல்லா கலைகளும் தெரியும். மக்களை எப்படி கொலை பண்ணரதுன்னும் தெரியும். ( ஆனா உலகில் உள்ள எல்லா பாஷைலயும் மக்கள் என்னை திட்டறாங்கரதும்
 எனக்கு தெரியும்)

28.9.10

சும்மா இருக்க முடியலையே...

டேய் வுட்டுடுடா தெரியாம உன்கிட்ட உரண்டை இழுத்துட்டேன் 
sunglasses animation