தலைவர்: ஏண்டா?
தொண்டன் : பின்ன என்ன தலைவா நானும் ரொம்ப நாளா பாத்துகிட்டேஇருக்கேன் உனக்கு ஒரு மிரட்டல் கடிதம் கூட வரமாட்டிங்குது. நீயெல்லாம் ஒரு தலைவன் இதெல்லாம் ஒரு கட்சியா?
2 . தொண்டன் 1 : எதிர்கட்சிய எதிர்த்து ஆர்ப்பாட்டம் பண்ணலாம்னு தலைவர்கிட்ட சொன்னது தப்பா போச்சு.
தொண்டன் 2 : என்னாச்சு?
தொண்டன் 1 : நம்மல கூட்டணில சேத்துகாத கட்சிகளை எதிர்த்து ஆர்பாட்டம்னு அறிவிச்சு இருக்கார்.
3 . தலைவர் : (மேடையில்) எங்களை வெற்றிபெற செய்தால் உங்களுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறோம்
கீழிருந்து ஒருவன்: "மாமா அப்ப ஒரு குவாட்டர் சொல்லேன்".
தலைவர்: (!!!!!!!!????????)
4. தொண்டன் 1 : என்னது நாளைக்கு நடக்கப்போற நம்ம கட்சி ஆர்பாட்டத்த எதிர்த்து மலைவாழ் மக்கள் எல்லாம் போராட்டம் நடத்த போறாங்களா ?
தொண்டன் 2 : பின்ன இந்தாளு வாய வச்சுக்கிட்டு சும்மா இருந்தாத்தான "விலைவாசியை எதிர்த்து ஆர்பாட்டம்"ம்ம்கிரதுக்கு பதிலா "மலைவாசியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்" ன்னு பேட்டி குடுதிருக்கார்.
5 . தமிழ்நாட்டுல ஆளும்கட்சியாவோ இல்ல எதிர்கட்சியாவோ இருக்கனும்னா என்ன பண்ணனும்?
ஆளும்கட்சியா இருந்தா லெட்டர் எழுத தெரிஞ்சிருக்கணும் எதிர்கட்சியா இருந்தா ஆர்பாட்டம் நடத்த தெரிஞ்சிருக்கணும். குறிப்பா ரெண்டு பேத்துக்குமே கேட்ட வார்த்தை பேச தெரிஞ்சிருக்கணும்.
புடிச்சிருந்தா உங்கள் பொன்னான வாக்குகளை ஈரோட்டுக்காரனுக்கு போட்டுட்டு போங்ணா....